தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்க, தெலுங்கு இயக்குநர் இயக்குவதாலோ என்னவோ விஜய் தற்போது நடித்து வரும் 66ஆவது படமான 'வாரிசு' படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் முதல் பார்வை, இரண்டாவது பார்வை போஸ்டர்கள் தமிழில் வெளியிடப்படவில்லை.

நேற்று வெளியான முதல் பார்வை மற்றும் இன்று காலை வெளியான இரண்டாவது பார்வை போஸ்டர்கள் இரண்டுமே ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகியுள்ளது. 

மேலும், ஆங்கிலத்தில் இப்படத்தின் பெயரை குறிப்பிடும்போது 'வரிசு' என உச்சரிக்கப்படும் விதத்தில் 'Varisu' என குறிப்பிடுவதாகவும் ரசிகர்கள் குறைபட்டுள்ளனர்.

இன்று மாலை 5.02 மணிக்கு படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகவுள்ளது. அதிலாவது தமிழ் டைட்டில் இடம்பெறுமா அல்லது அதுவும் ஆங்கிலத்தில் தான் இருக்குமா என்றும் விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.