இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி உடனான போட்டிகள் குறித்த பட்டியலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், ஜூலை மாதம் பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இந்த சுற்றுப்பயணமானது 3 நாள் பயிற்சி ஆட்டத்துடன் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி ஜூலை 6, ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது மீணடும் இலங்கைக்கு வருகின்றது.

இந்த போட்டி ஐ.சி.சி. ஆண்கள் உலக டெஸ்ட் சம்பியன் சிப் போட்டித்தொடருடன் இணைந்த தொடராக காணப்படுகின்றது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகி 20 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது. 2 ஆவது டெஸ்ட் போட்டி ஜூலை மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகி 28 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.