ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளது.

குறித்த பூகம்பம் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்டுள்ளது.

பூகம்பம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதோடு,  தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிலோ மீற்றர் (27 மைல்) தொலைவில் 51 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஹெலிக்கொப்டர் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 மீற்றர் தூரத்துக்கு பூகம்பம் உணரப்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.