தமிழக மக்கள் வழங்கிய நிவாரணப்பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக தெரிவித்து அக்கரப்பத்தனையில் போராட்டம்

Published By: Digital Desk 4

22 Jun, 2022 | 03:28 PM
image

(க.கிஷாந்தன்)

தமிழக மக்களின் உதவியுடன் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சனசமூக நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டத்தில் 200 குடும்பங்கள் இருந்தபோதும் வேலை செய்யும் 110 குடும்பங்களுக்கு மாத்திரம் 10 கிலோ கொண்ட அரிசி பொதி இன்று (22.06.2022) தோட்ட நிர்வாகத்தால் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில் அனைத்து மக்களுக்கும் இந்த நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுமென தெரிவித்து, தோட்ட  நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

தோட்ட உதவி முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக தொழிலாளர்களுக்கு அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இதனைப் பெற்றுக் கொள்வதற்காக தொழிலாளர்கள் வந்தபோது 110 குடும்பங்களுக்கு மாத்திரம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்ததை அடுத்து தோட்ட அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

அத்தோடு  நிவாரணம் கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது தேவையில்லை என மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து தோட்ட அதிகாரிகள் அரிசி வழங்கும் நிலையத்தை மூடி சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அரிசி வைத்திருந்த களஞ்சியசாலையை முற்றுகையிட்டனர் .

அதேவேளை  கல்மதுரை, ஆகரல்பெத்த, மோர்சன் ஆகிய தோட்டத்திற்கு வழங்கப்பட இருந்த அரிசியையும் வாகனத்தில் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56
news-image

வடகொரியாவாக இலங்கை மாறுவதை தடுக்க மக்கள்...

2025-02-17 17:46:43
news-image

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று...

2025-02-17 22:23:31
news-image

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத்...

2025-02-17 17:42:01
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக...

2025-02-17 21:54:07
news-image

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான...

2025-02-17 17:39:29
news-image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள்...

2025-02-17 21:06:03