கிளிநொச்சியில் வீட்டை உடைத்து சேதப்படுத்திய இனம்தெரியாத கும்பல் 

By T Yuwaraj

22 Jun, 2022 | 02:47 PM
image

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பகுதியில், இன்று 22 அதிகாலை,  இனந்தெரியாத கும்பலால் வீட்டுடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில், 4 பேர் கொண்ட குழுவினர் வீட்டின் பிரதான வாயிலை அடித்து உடைத்து சேதமாகியதோடு, வீட்டின் முன் கதவினை முற்றுமுழுதாக சேதப்படுத்தியுள்ளனர்.

அத்தோடு, வீட்டில் பெறுமதிமிக்க பல பொருட்களையும் சேதமாக்கியதுடன், வீட்டுக்கதவைத் பெற்றோல் ஊற்றி எரிக்க முயற்சிக்கபட்டுள்ளது. 

யுத்தத்தில் தனது கணவனை இழந்த நிலையில் 5 ஜந்து பிள்ளைகளுடன் வசித்து வந்த குடும்பதின் வீடிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பக தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக தருமபுரம் போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right