இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தம் குறித்து பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜான்சன்  பாராட்டியுள்ளதுடன் அதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார். பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய சூழலில் புது டெல்லியுடன் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தமானது மிகவும் முக்கியமானதொன்றென அவர் அறிவித்துள்ளார்.

ருவாண்டா தலைநகர் கிகாலியில் பொதுநலவாய அரச தலைவர்கள் கூட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில் இந்த ஒப்பந்தம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

54 உறுப்பினர்களைக் கொண்ட  பொதுநலவாய அமைப்பின் அனைத்து நாடுகளுக்கும் மகத்தான மதிப்பளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

துவாலுவின் பசிபிக் தீவுக்கூட்டம் (மக்கள் தொகை 11,000) இந்தியாவின் அதே அட்டவணையில் இருக்கும் (மக்கள் தொகை 1.3 பில்லியன்). இருப்பினும், நமக்கு இடையே உள்ள அனைத்து வேறுபாடுகளுக்கும், பகிரப்பட்ட மதிப்புகள், வரலாறு இவை அனைத்திலுமாக இணைந்துள்ளதாக பிரதமர் ஜான்சன் 'தி டெய்லி டெலிகிராப்'  பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

'இவை அனைத்தும் பிரிட்டனுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்குகின்றன. இதன் மூலம் உண்மையான மற்றும் அளவிடப்பட்ட வர்த்தக நன்மையுடன் பரந்த மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளை பொதுநலவாய நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைக்கிறது.

அதனால்தான் நாங்கள் சுதந்திர வர்த்தகம் அல்லது பொருளாதார கூட்டாண்மையில் கையெழுத்திட  ஆர்வத்துடன் உள்ளோம். முடிந்தவரை பல காமன்வெல்த் நாடுகளுடன் ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படும்.

ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்த போது பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னெடுக்கப்பட்ட இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில்  தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தம் குறித்து விரிவாக கலந்துரையாடியதாகவும் பிரதமர் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.