அட்டனில் 12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

Published By: Digital Desk 4

22 Jun, 2022 | 01:51 PM
image

(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட   டிக்கோயா தரவளை கீழ்பிரிவு தோட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் நான்கு வீடுகள் தீயினால் பகுதி அளவில் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த நான்கு வீ்டுகளிலும் இருந்த 20 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தீ விபத்தின் போது, எவருக்கும் தீ காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு,  சில பொருட்களே தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு  அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை இது தொடர்பாக அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை நோர்வூட் பிரதேச சபை தவிசாளரும், அட்டன் டிக்கோயா நகர சபை உறுப்பினர் எஸ்.ரட்ணகுமாரும் இணைந்து வழங்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - தாண்டிக்குளத்தில் மோட்டர் குண்டு...

2024-09-11 02:03:48
news-image

யாழில் உயர்தரப் பிரிவு மாணவிக்கு எமனாக...

2024-09-11 00:07:11
news-image

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும்...

2024-09-10 23:12:17
news-image

இலங்கை இளைஞர்கள் 2252 பேருக்கு இஸ்ரேலிலில்...

2024-09-10 19:46:59
news-image

தமிழர்களை ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு அறிக்கை வெளியிட...

2024-09-10 20:57:49
news-image

முதலாளிமார் சம்மேளனம் வழக்குகளை வாபஸ் பெற...

2024-09-10 19:43:45
news-image

மாத்தறையில் போலி ஆவணங்களுடன் ஐவர் கைது

2024-09-10 19:46:29
news-image

3 வயது சிறுமி மீது பாலியல்...

2024-09-10 19:39:00
news-image

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை...

2024-09-10 19:37:55
news-image

அதிரடியாக 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவி...

2024-09-10 19:18:17
news-image

சகல வேட்பாளர்களினதும் விஞ்ஞாபனங்களை அலசி ஆராய்ந்து...

2024-09-10 19:03:50
news-image

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றிக்கடனை செலுத்த மக்கள்...

2024-09-10 15:54:34