ஏஎவ்பி

இலங்கையின் பிரபல கசினோமையங்களின் உரிமையாளர் தம்மிக பெரேரா இலங்கையின் சிதைந்துபோயுள்ளபொருளாதாரத்திற்கு மீட்சியை கொடுக்கும் ஆணையுடன் புதன் கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

தன்னை ஊழல்வாதி என முன்னர் குற்றம்சாட்டிய பிரதமருடன் இணைந்து அவர் பணிபுரியவுள்ளார்.

54 வயது தம்மிகபெரேரா நாட்டை தவறாக நிர்வகித்ததன் மூலம்  நாட்டை தற்போதைய நிலைக்கு தள்ளினார்கள் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டும்ராஜபக்ச பரம்பரையின் நீண்டகால விசுவாசி.

ஏப்பிரலில் நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் தனது  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்சவிற்கு இடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை ஜனாதிபதி நியமித்தார் விரைவில் அவர் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக அமைச்சரவைக்குள் நுழைவார் என ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் ஏஎவ்பிக்கு தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக நியமிக்கப்பட்ட ஐக்கிய அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பெரேரா பணிபுரிவார்.

2015இல் ரணில் விக்கிரமசிங்க கசினோ பெரும் முதலாளியை  ஊழல் மிகுந்த ராஜபக்ச அரசாங்கத்தை காப்பாற்றியவர் என குற்றம்சாட்டியிருந்தார்.இலங்கையின் நான்கு மோசமான ஊழல்வாதிகளில் ஒருவர் எனவும்  தம்மிக பெரேராவை  ரணில்விக்கிரமசிங்க வர்ணித்திருந்தார்.

சபாநாயகர் முன்னிலையில் தம்மிக பெரேரா பதவியேற்ற பின்னர்அவரும் பிரதமரும் கைகுலுக்கிக்கொண்டர்.

வங்கி ஹோட்டல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளில் ஆர்வம் கொண்டுள்ள தம்மிக பெரேரா இலங்கை உணவு மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களிற்காக ஒரு மாதத்திற்கும் மேல் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.இலங்கையின் தலாவருமானத்தை 12000 அமெரிக்க டொலராக- சீனாவை விட அதிகம் - உயர்த்துவதற்கான திட்டமொன்று உள்ளது என பெரேரா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வங்கிகளில் 100,000 அமெரிக்க டொலரை முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களிற்கு பத்து வருட விசாவை வழங்குவதன் மூலம் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வை காணப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் ஏற்கனவே ஏப்பிரல் முதல் நடைமுறையில் உள்ளது.