கம்போடியாவில் 300 கிலோ எடை கொண்ட, உலகின் மிக பெரிய, அரிய வகை நன்னீர் மீன் பிடிப்பட்டுள்ளது.

கம்போடியா நாட்டில் ஓட கூடிய மேகாங் ஆறானது 6 ஆசிய நாடுகளின் வழியே பாய்கிறது. இந்த ஆற்றில் 300 கிலோ எடை கொண்ட மிக பெரிய ஸ்டிங்ரே என்ற அரிய வகை மீனானது காணப்படுகிறது. 

இதனை மவுல் துன் (வயது 42) என்ற மீனவர் தனது வலையில் பிடித்துள்ளார். இதன்பின், அதனை விஞ்ஞானிகள் குழுவிடம் தெரிவித்துள்ளார். 

அது ஒரு பெண் மீன் என தெற்காசிய நாடுகள் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

13 அடி நீளமுடன், நன்னீரில் வாழும் உலகின் மிக பெரிய மீன் என்ற புதிய சாதனையையும் அது படைத்துள்ளது. 

கடந்த 2005ம் ஆண்டில் 293 கிலோ எடையுடன் தாய்லாந்து நாட்டில் மிக பெரிய கேட்பிஷ் ஒன்று பிடிக்கப்பட்டது. 

இந்த சாதனையை ஸ்டிங்ரே முறியடித்து உள்ளது. இதனை முழு நிலவு என பொருள்படும்படியான பொராமி என பெயரிட்டுள்ளனர்.

இந்த மீனின் மீது சிறிய உபகரணம் ஒன்றை பொருத்தி, ஒரு வருடத்திற்கு அதன் இயக்கம் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.