தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு, யாரோ சிலர் பில்லி சூனியம் வைத்ததுதான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி முதல் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தற்போதும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு பில்லி சூனியம்தான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல ஜோதிடர் ஒருவர் தங்கள் பத்திரிக்கைக்கு அந்த செய்தியை கூறியதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. 

திமுகவினர் சிலர் பல இலட்சங்களை செலவு செய்து, அவருக்கு எதிராக செய்வினை மற்றும் பில்லி சூனியம் ஆகியவற்றின் மூலம், அவரது உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.  திமுக கட்சியில் மட்டுமல்ல. அவரது சொந்த கட்சியிலேயே கூட யாரவது இப்படி செய்திருக்கலாம் என்று அந்த ஜோதிடர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், சமீபத்தில் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கும் பில்லி-சூனியம்தான் காரணம் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது