ஆப்கானிஸ்தானில் இன்று புதன்கிழமை அதிகாலை  பூகம்பம்  ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த பூகம்பத்தில் ஆப்கானிஸ்தானில்  250 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பூகம்பம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதோடு, தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிலோ மீற்றர்  (27 மைல்) தொலைவில் 51 கிலோ மீற்றர்  ஆழத்தில் பூகம்பம்ஏற்பட்டது.

250 பேர் வரை உயிரிழந்துள்ளனர் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு பூகம்பம் உணரப்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.