முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு  நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

துமிந்த சில்வா தனது  சொத்து மதிப்பினை தெளிவுப்படுத்தாத  வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த வழக்கு தொடர்பிலேயே இவருக்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை குற்றம் தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.