ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதிகளுக்கு கனடா தடை 

By T Yuwaraj

21 Jun, 2022 | 08:42 PM
image

கனேடிய அரசாங்கமானது ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக் கூடிய  தீங்கு விளைவிக்கும் ஒரு தொகை பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் தடை விதிப்பதாக அந்நாட்டு நேரப்படி நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

அந்த வகையில் கொள்வனவுப் பைகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் உணவுகளை பொதி செய்வதற்கான உற்பத்திகள் உள்ளடங்கலாக மீள் சுழற்சிக்குட்படுத்துவதற்கு  சிரமமாகவுள்ள பொருட்களுக்கு மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.

எமது அரசாங்கம் பிளாஸ்டிக் மாசாக்கத்தைக் குறைக்க ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக் கூடிய தீங்கான  பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கிறது என கனேடிய சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்டீவன் கில்போல்ட்  தெரிவித்தார். மேற்படி நடவடிக்கையை  பிளாஸ்டிக் மாசாக்கம் தொடர்பான  வரலாற்று முக்கியத்துவம் மிக்க  முன்னடியெடுத்து வைப்பாக அவர் குறிப்பிட்டார்.

மேற்படி   மீள் சுழற்சிக்கு  உட்படுத்தாது ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக் கூடிய  பிளாஸ்டிக்காலான பொருட்களின்  உற்பத்தி மற்றும் இறக்குமதிகளை முடிவுக்கு கொண்டு வரும்  நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அது தொடர்பான தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அதேசமயம் அத்தகைய பொருட்களை விற்பதற்கு 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

ஆனால் குளிர்பானங்களை அருந்துவதற்கான உறிஞ்சுகுழாய் (ஸ்ட்ரோ) போன்ற சில பொருட்ளை விசேட தேவையுள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு தடையிலிருந்து  தற்காலிக விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  பிளாஸ்டிக்  பழப்பானப் போத்தல்கள் சகிதம்  மீள்சுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய உறிஞ்சுகுழாய்களை 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கனேடிய அரசாங்கம் 56 பிளாஸ்டிக் வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் தடை விதிக்கவுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளுக்கும் முடிவுகட்ட கனேடிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ஸ்டீவன் கில்போல்ட் தெரிவித்தார். 

கனடாவானது ஆண்டொன்றுக்கு 15.5  பில்லியன் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதுடன்  நாளொன்றுக்கு 16 மில்லியன்  உறிஞ்சுகுழாய்களை (ஸ்ட்ரோக்களை)  உபயோகிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

191 இணையத்தளங்களை மூடுவதற்கு பங்களாதேஷ் அரசு...

2023-01-31 18:30:55
news-image

பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் டொலர் கடன்...

2023-01-31 17:26:15
news-image

ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம்: முதல்வர்...

2023-01-31 16:54:03
news-image

நமீபியாவில் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுவது பல மடங்காக...

2023-01-31 16:07:03
news-image

திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சட்டபூர்வ அனுமதி...

2023-01-31 15:02:32
news-image

ஒளிந்துபிடித்து விளையாடிக் கொண்டிருந்த பங்களாதேஷ் சிறுவன்,...

2023-01-31 15:12:36
news-image

அபுதாபி - மும்பை விமானத்தில் ஊழியரை...

2023-01-31 13:06:07
news-image

அவுஸ்திரேலியாவில் குடும்பவன்முறைகளில் ஈடுபடுபவர்களை இலக்குவைத்து விசேட...

2023-01-31 12:28:48
news-image

இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களை நன்கு அறிந்தவர்...

2023-01-31 09:50:51
news-image

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 83...

2023-01-31 09:49:02
news-image

யூதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட பாலஸ்தீனியரின்...

2023-01-30 17:20:57
news-image

பாகிஸ்தானின் பள்ளிவாசலுக்குள் குண்டுவெடிப்பில் 59 பேர்...

2023-01-31 09:16:07