( எம்.எப்.எம்.பஸீர்)
பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை தொடர்ந்து ஏற்பட்ட, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்காமலேயே நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று ( 21) தீர்மானித்தது.
![]()
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன தலைமையிலான யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுக்களை பரிசீலித்த நிலையில், அவற்றை விசாரணைக்கு ஏற்காமல் நிராகரிப்பதாக அறிவித்தது.
மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து , வெளிநாட்டு ஊடகவியலாளர் ரோயல் ரேமன்ட், பிரபல மொழிபெயர்ப்பாளர் காமினி வியாங்கொட, சமூக செயற்பாட்டாளர் சந்ரா ஜயவரத்ன உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டன.
அரசியலமைப்பின் 99 அ உறுப்புரை பிரகாரம், தம்மிக பெரேராவின் நியமனம் சட்ட விரோதமானது என குறிப்பிட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அரசியலமைப்பின் 99 அ உறுப்புரை பிரகாரம், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட வேட்பு மனுக்கள் அல்லது தேசியப் பட்டியலில் ஒருவரது பெயர் சேர்க்கப்பட்டிருந்தால் மட்டுமே, அத்தகைய வெற்றிடத்தை நிரப்ப ஒரு நபர் பரிந்துரைக்கப்படுவதற்கு தகுதியுடையவர் என மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்ப்ட்டது.
அதன்படி அரசியலமைப்பின் 99 அ உறுப்புரையின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தேசிய பட்டியலில் அல்லது 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக அக் கட்சியினால் எந்தவொரு தேர்தல் மாவட்டத்திலும் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவிலும் தம்மிக்க பெரேராவின் பெயர் இல்லை என சுட்டிக்காட்டும் மனுதாரர்கள், அதனூடாக குறித்த நியமனம் நியாயமற்ற சட்ட விரோதமான செயல் என மனுக்களில் குறிப்பிட்டிருந்தனர்.
இந் நிலையில் நேற்று 20 ஆம் திகதியும் இன்றும் 21 ஆம் திகதியும் குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்ப்ட்டன.
இதன்போது தனது நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவினை முன் கொண்டு செல்வது தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை தான் பாராளுமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளப் போவதில்லை என பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா உயர் நீதிமன்றுக்கு உறுதியளித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே இன்று குறித்த மனுக்களை விசாரணைக்கு ஏற்காது உயர் நீதிமன்றம் நிராகரித்தது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM