நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மிகவும் பாரிய மற்றும் முன்னணி தனியார் எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்றான லங்கா ஐஓசி பீஎல்சி, இந்த ஆண்டு ஒக்டோபரில் இடம்பெற்ற TRAIL நடைபவனி முயற்சிக்கு தாராள நன்கொடையை வழங்கியுள்ளதன் மூலமாக நிறுவனத்தின் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு ஸ்தானத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
இந்த தாராள நன்கொடைக்கான காசோலையை லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஷியாம் போஹ்ரா மஹேல ஜெயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரிடம் கையளித்து வைத்திருந்தார்.
லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஷியாம் போஹ்ரா கூறுகையில்,
“போற்றத்தக்க ஒரு நற்காரியத்திற்கான முன்னெடுப்பில் பங்குபற்றும் பொதுமக்கள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைக்க உதவுகின்ற TRAIL நடைபவனி போன்று பொதுமக்கள் மத்தியில் நிதி திரட்டும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதில் நாம் ஆர்வத்துடன் உள்ளோம்”.
நாதன் சிவகணநாதன் மற்றும் சரிந்த உனம்பூவ ஆகியோரின் சிந்தனையில் மலர்ந்து அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட TRAIL நடைபவனி இலங்கையில் பொது மக்கள் மத்தியில் நிதி திரட்டப்படுகின்ற மிகப் பாரிய நன்கொடை முயற்சியாக அமைந்துள்ளது.
காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவொன்றை புதிதாக நிர்மாணிக்கும் நோக்கில் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது அண்ணளவாக ரூபா 735 மில்லியன் தொகையை திரட்டுவதே இந்த நடைபவனியில் கலந்துகொண்டவர்களின் நோக்கமாக அமைந்தது.
2011 ஆம் ஆண்டில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட TRAIL நடைபவனி முதலில் நாட்டின் தென்கோடியிலிருந்து ஆரம்பித்து 27 தினங்களாக பயணித்து, மொத்தமாக 670 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து வட பகுதியில் நிறைவடைந்திருந்தது.
Fortune 500 நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற IOCL நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாக லங்கா ஐஓசி பீஎல்சி தொழிற்பட்டு வருகின்றது. அரசாங்கத்திற்குச் சொந்தமான இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்குப் புறம்பாக நாட்டிலுள்ள ஒரேயொரு தனியார் எண்ணெய் நிறுவனமாக இது தொழிற்பட்டு வருவதுடன் இலங்கையில் 199 சில்லறை வியாபார பெட்ரோல், டீசல் நிரப்பு நிலையங்களைக் கொண்டுள்ளது.
அத்துடன் மிகவும் திறன்மிக்க மசகு எண்ணெய் சந்தைப்படுத்தல் வலையமைப்பொன்றையும் கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள மிகப் பாரிய பெட்ரோலிய களஞ்சியப்படுத்தல் வசதியாக திருகோணமலையில் எண்ணெய்க் குதம் ஒன்றையும் வருடம் ஒன்றில் 18,000 தொன் கொள்ளளவு கொண்ட Servo வர்த்தகநாம மசகு எண்ணெய் உற்பத்திகளுக்கான கலவை நிலையத்தையும் கொண்டுள்ளதுடன் இலங்கை தரக் கட்டளைகள் நிலையத்தால் ISO 9001:2015 தர சான்று அங்கீகாரம் பெற்ற மசகு எண்ணெய் சோதனை ஆய்வுகூடமொன்றையும் திருகோணமலையில் கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM