அயோக்கியத்தனமான அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்களுடன் வீதியில் இறங்கி  போராடுவோம் - சஜித் சபையில் சூளுரை 

By Vishnu

21 Jun, 2022 | 05:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அயோக்கியத்தனமான , திருட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நாங்கள் துணைபோக மாட்டோம். மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

அதனால் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாத பாராளுமன்ற நடவடிக்கையை பகிஷ்கரித்து  மக்களுடன் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில்,

நாங்கள் பாராளுமன்றத்தை கூட்டி சபையை நடத்தும் இந்த நேரத்தில் நாட்டில் பேரவலங்கள் உருவாகியுள்ளன. தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு 220 இலட்சம் மக்களும் பெரும் துன்பத்தில் இருக்கின்றனர்.

மக்களின் பிரச்சினைகள் எதற்கும் எந்தத் தீர்வும் இல்லை. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், கேஸ் வரிசைகள் அவ்வாறே தொடர்கின்றன.

அரசாங்கம் மாறிய பின்னர் அந்த வரிசைகள் அதிகரித்துள்ளன. பிள்ளைகளுக்கு பால்மா இல்லை. மக்களுக்கு தொழில் இல்லை. தனியார் துறை தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.

அரச சேவைகள் முடங்கியுள்ளன. அனைத்து தொழிற்துறையினரும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் முன்வைக்கவில்லை.

மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கும் அரசாங்கமே இப்போது இருக்கின்றது. மக்களுக்கு இந்த துன்பங்களை தாங்கிக்கொள்ள முடியாது. இரண்டரை வருடங்களாக செயற்பட்ட தூர நோக்கு சிந்தனைகள் இல்லாத சர்வாதிகார ஆட்சியின் பிரதிபலன்களே இவை.

பாரிய மக்கள் ஆணையுடன் ஜனாதிபதி தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கம் அமைக்கப்பட்டது. சௌபாக்கிய நோக்கு இன்று மக்களுக்கு அசௌபாக்கிய நோக்காக மாறியுள்ளது. இன்று மக்களுக்கு உணவு இல்லை. வைத்தியசாலைகளில் மருந்துகளும் இல்லை.

சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன, பாடசாலைகள் மூடப்பட்டு 42 இலட்சம் மாணவர்களும் நிர்க்கதியாகியுள்ளனர். மக்களின் கவலைகள் கஷ்டங்கள் தொடர்பில் எந்தவித இறக்கமும் காட்டாத அரசாங்கமே இப்போது உள்ளது. அதேபோன்று பாராளுமன்றமும் கதைகளை கூறும் இடமாக இந்த அரசாங்கம் மாற்றியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக கோப் குழுவுக்கு வந்த மின்சார சபையின் தலைவர் கூறுகின்றார். இந்த நாட்டின் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு காட்டிக்கொடுக்கவே அவ்வாறு செய்கின்றனர். இப்போது அந்த தலைவர் பதவி விலகியுள்ளார். ஆனால் எங்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன.

மேலும்  மக்கள் வரிசைகளில் துன்பப்படும் போது எரிவாயுவில் அரசாங்கம் கொள்ளையடிக்கின்றது. டொலர்களை கப்பமாக பெற்றுக்கொள்கின்றனர். இந்நிலையில் இந்தியா வழங்கும் உதவிக்கு நன்றி தெரிவிக்கின்றோம். அவர்களின் கடன் திட்டத்தில் மருந்து கொண்டு வருவதிலும் சில குழுக்கள் கொள்ளையடிக்கின்றன. மாளிகைகளில் இருந்துகொண்டு அதனை செய்கின்றனர். அவர்கள் யார் என்பதனை பின்னர் கூறுகின்றோம்.

இந்த அரசாங்கத்திற்கு நாட்டு மக்களின் துன்பங்கள் தெரியவில்லையா? இதற்கு தீர்வு இல்லையா? இந்த அரசாங்கம் பாராளுமன்றத்தை கேவலப்படுத்தியுள்ளது. எங்களுக்கு வீதிகளில் இறங்க முடியும். கொள்கைகளை பின்பற்றுகின்றோம். நாங்கள் பதவிகளுக்காக எங்களின் சுய கௌரவத்தை காட்டிகொடுப்பவர்கள் அல்ல.

அயோக்கியத் தனமான  , திருட்டு அரசாங்கமே இது, அமைச்சரவையில் தலைகளை மாற்றிக்கொண்டு பெரியவர்கள் சுகபோகம் அனுபவிக்கின்றனர். ஆனால் 220 இலட்சம் மக்களும் நிர்க்கதியாகியுள்ளனர். அவர்களின் குரல்களை இந்த சபையில் எழுப்ப முயற்சிக்கும் போது சிலர் கூச்சலிடுகின்றனர்.

நாங்கள் இப்போது பாராளுமன்ற கூட்டத்தை நடத்துவதன் ஊடாக 220 இலட்சம் மக்களுக்கும் கிடைக்கும் நன்மை என்ன? வாழ்க்கைச் செலவு வானை எட்டியுள்ளது. இது புரியவில்லையா?

இதனால் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியும் எதிர்க்கட்சியின் அனைத்து முன்னணி குழுக்களும் சில தீர்மானங்களை எடுத்துள்ளன. இந்த நாட்டு மக்களின் வலிகளை புரிந்துகொள்ளாத மக்களை ஏமாற்றும் அரசாங்கம் செய்யும் வேலைகளுடன் நாங்கள் தொடர்புபடாது இந்த வாரம் நாங்கள் பாராளுமன்றத்தை பகிஷ்கரிப்போம் என்பதனை கூறிக்கொள்கிறோம். நாங்கள் மக்களுடன் வீதிகளில் அமர்ந்துகொள்வோம். நாங்கள் அன்றும் இருந்தோம், நேற்றும் இருந்தோம் எதிர்காலத்திலும் மக்களுடன் இருப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நில்வலா கங்கையில் முதலையால் கௌவிச் செல்லப்பட்டவரின்...

2022-11-30 10:25:06
news-image

கட்டுமானத் துறையில் ஒரு தேசியக் கொள்கை...

2022-11-30 10:06:51
news-image

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிரான தொழிற்சங்க...

2022-11-30 10:22:31
news-image

சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம்...

2022-11-30 10:20:13
news-image

உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களை தாமதமின்றி நடத்தவேண்டும்...

2022-11-30 09:02:29
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-30 08:45:56
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்!

2022-11-30 08:50:50
news-image

உள்நாட்டில் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடு செல்லும்...

2022-11-29 21:43:22
news-image

சுகாதாரத்துறை ஆபத்துக்குள் தள்ளப்படும் நிலை :...

2022-11-29 21:48:08
news-image

பாராளுமன்ற செயற்பாடுகளை புறக்கணிப்போம் - லக்ஷமன்...

2022-11-29 21:56:33
news-image

இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம்...

2022-11-29 21:58:30
news-image

அதிகாரப் பகிர்வுக்கு ஆளுங்கட்சி இணங்குமா ?...

2022-11-29 16:21:19