வெலிகம - மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து படகு மூலமாக திமிங்கில மீன்களை பார்வையிடச் சென்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த74 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபருக்கு படகில் வைத்து ஏற்பட்ட திடீர் நோய் நிலைக்காரணமாக இவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.