'தமிழகத்தை நாடி வந்த இலங்கை தமிழ் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட அரசு உறுதி பூண்டுள்ளது' என உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளத்தில், '' ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2000 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 20-ஆம் உலக அகதிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்பதே தமிழர் வாழ்வியல் மரபு. உலகெங்கும் அகதிகளாக வாழ்பவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டிய நிலையில், தாய் தமிழ்நாட்டை நாடிவந்த இலங்கை தமிழ் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட நமது அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
அகதிகள் முகாம் என்ற பெயரை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றம் செய்து, அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
வாழ்வுரிமை - குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என அதில் பதிவிட்டிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM