நடிகர் அசோக் செல்வன், நடிகைகள் ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி கதையின் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வேழம்' அனைவரையும் கவரும் உளவியல் ரீதியான திகில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் சந்தீப் ஷாம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'வேழம்'. இதில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் கிட்டி என்கிற ராஜா கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர் தேனப்பன், அறிமுக நடிகர் ஷாம் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜானு சந்தர் இசை அமைத்திருக்கிறார்.
சைக்காலஜிக்கல் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை கே ஃபோர் கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கேசவன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் சொன்னவுடன் தயாரிக்க ஒப்புக்கொண்டார். உளவியல் திரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கும் இதன் திரைக்கதையை முழுமையாக உள்வாங்கி, லீனா ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா மேனன் நேர்த்தியாக நடித்து அசத்தியிருக்கிறார்.
'தெகிடி' படத்திற்குப் பிறகு மீண்டும் அசோக் செல்வன் - ஜனனி ஜோடி திரையில் இணைந்திருக்கிறது. இவர்களின் மாயாஜாலம் ரசிகர்களை கவரும் என நம்புகிறேன். கதையின் நாயகன் அசோக் செல்வனுக்கு வெவ்வேறு காலகட்ட தோற்றம் என்பதால், உடல் எடையை குறைத்தும், அதிகரித்தும் நடித்தார். பாடல்கள் மெல்லிசையாக இருந்தாலும் பின்னணி இசையில் அதிரடி காட்டி இருக்கிறார் இசையமைப்பாளர். குழுவாக இணைந்து படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
'வேழம்' என்றால் யானை என பொருள். இதில் யானையின் குணாதிசயங்களில் ஒன்று முதன்மையான கதாபாத்திரத்துடன் ஒன்றியிருக்கிறது. இதுவும் ரசிகர்களை கவரும் என நம்புகிறோம்'' என்றார்.
'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'மன்மத லீலை', 'ஹாஸ்டல்' என வரிசையாக வெற்றி படங்களை அளித்திருக்கும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருப்பதாலும், இரண்டு நாயகிகள் நடித்திருப்பதாலும், சைக்காலஜிக்கல் திரில்லர் ஸ்கிரிப்ட் என்பதாலும், இம்மாதம் 24ஆம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகவிருக்கும் 'வேழம்' படத்திற்கு ரசிகர்களிடமும், திரையுலக வணிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM