எல்.பி.எல். 3 ஆவது அத்தியாயத்தில் வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்வதற்கான காலம் நீடிப்பு

Published By: Vishnu

21 Jun, 2022 | 03:57 PM
image

(நெவில் அன்தனி)

இந்த வருடம் நடைபெறவுள்ள எல்பிஎல் 3ஆவது அத்தியாயத்தில் வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது.

இதற்கு அமைய எல்பிஎல் கிரிக்கெட் 3ஆவது அத்தியாயத்தில் பதிவு செய்ய விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் ஜூன் மாதம் 28ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தங்களைப் பதிவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பல வெளிநாட்டு வீரர்களினாலும் அணி உரிமையாளர்களினாலும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களைக் கருத்தில்கொண்டு பதிவு காலத்தை நீடிக்க தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தது.

ஆரம்பத்தில் வீரர்கள் பதிவுகள் ஜூன் 23ஆம் திகதியுடன் நிறைவுபெறுவதாக இருந்தது.

புதிய மாற்றத்துக்கு அமைய ஜூன் மாதம் 28ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வெளிநாட்டு வீரர்கள் தங்களைப் பதிவுசெய்யலாம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் பதிவுகள் வேவ்வெறு தர நிலைகளில்  பதிவு    செய்யப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.

இதற்கு அமைய இன்டர்நெஷனல் ரூபி (சர்வதேச மாணிக்கம்), இன்டர்நெஷனல் சஃபயர் (சர்வதேச நீல மாணிக்கம்), இன்டர்நெஷனல் டயமண்ட் (சர்வதேச வைரம்) ஏ மற்றும் பி, சர்வதேச ப்ளட்டினம் (சர்வதேச வன்பொன்) ஆகிய பிரிவுகளில் வெளிநாட்டு வீரர்களின் பதிவுகள் இடம்பெறுகின்றது.

ரூபி மற்றும் சஃபயர் பிரிவுகளில் அணிகளுக்கான தேர்வுக்கு தங்களைப் பதிவு செய்யும் வெளிநாட்டு வீரர்கள்   அந்தந்த நாடுகளில் தேசிய கிரிக்கெட் சம்மேளனத்தில் அல்லது சபையில் பதிவு செய்யப்பட்வர்களாக அல்லது சர்வதேச போட்டிகளில் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் உலகப் பிரசித்தி பெற்ற வீரர்களாகவும் இருக்க வேண்டும்.

அணிகளுக்கான தேர்வுக்கு தங்களைப் பதிவு செய்யும் ஏனையவர்கள் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அல்லது இணை உறுப்பு நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்ட சமகால சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அல்லது பிரதான இருபது 20 தொழில்முறை கிரிக்கெட் லீக்குகளில் விளையாடுபவர்களாக இருக்க வேண்டும்.

இந்த சுற்றுப் போட்டியில் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கலம்போ ஸ்டார்ஸ், தம்புள்ள ஜயன்ட்ஸ், கோல் க்ளடியேட்டர்ஸ், கண்டி வொரியர்ஸ் ஆகிய ஐந்து தொழில்முறை அணிகள் பங்குபற்றுகின்றன.

இலங்கையில் நடத்தப்படும் அதி உயரிய கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 3ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 22ஆம்  கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கிலும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கிலும் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35