நாட்டில் 22 ஆம், 23 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அட்டவணை

By T Yuwaraj

21 Jun, 2022 | 03:26 PM
image

நாட்டில் நாளை (22) மற்றும் புதன்கிழமை (23) ஆகிய தினங்களில், 02 முதல் 03 மணித்தியாலங்களுக்கு இடையில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அந்த வகையில், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W பிரிவுகளுக்கு 2 ½ மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், இந்த மின்வெட்டு பகல் 12 மணி முதல் இரவு 10.00 மணி வரை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குழு  CC க்கு காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

M, N, O, X, Y, மற்றும் Z  ஆகிய பிரிவுகளுக்கு காலை 5.00 மணி முதல் காலை 8.00 மணி வரை மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right