ஒலிம்பிக் தினதினக் கொண்டாட்டத்தின் ஓர் அம்சமாக இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு ஏற்பாடு செய்துள்ள இணையவழி புதிர் போட்டி 23ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஒலிம்பிக் பெறுமதிகள் தொடர்பாக நடத்தப்படும் இந்தப் புதிர் போட்டியில் 30 வயதுக்குட்பட்டவர்கள் மாத்திரம் பங்குபற்றலாம்.

ஆங்கில மொழியில் நடத்தப்படவுள்ள இந்தப் புதிர் போட்டியில் பங்குபற்ற விரும்புவர்கள் ஜூன் 22ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் https://forms.gle/735v5TC6CTzMKCbD6 என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.