21 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற விசேட பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் - நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு

By T. Saranya

21 Jun, 2022 | 04:53 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்புக்கான 21 ஆவது  திருத்தம் அரசியலமைப்புடன் முரண்படுவதனால் அது நிறைவேற்றப்பட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பும்  அவசியம் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையின் ஆரம்பமாக சபாநாயகர் அறிவிப்பு இடம்பெற்றது. 

இதன்போதே சபாநாயகர் உயர் நீதிமன்ற தீர்ப்பை சபைக்கு அறிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உற்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான 21 ஆவது  திருத்தம் எனத் தலைப்பிடப்பட்ட சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எனக்குக் 

கிடைக்கப்பெற்றுள்ளதென்பதை பாராளுமன்றத்துக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

உயர் நீதிமன்றம் பின்வரும் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது, 

(i) சட்டமூலத்தின் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 23, 24, 26, 27, 28 மற்றும் 36 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் உறுப்புரை 4(ஆ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரை 3 உடன் ஒவ்வாததாகவிருப்பதனால் அது உறுப்புரை 84 (2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்.

(ii) சட்டமூலத்தின் 2, 3, மற்றும் 4 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் உறுப்புரை 4 (உ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரை 3 உடன் ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84(2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்;

(iii) சட்டமூலத்தின் 14 ஆம் வாசகம் தற்போது உள்ளவாறு அரசியலமைப்பின் உறுப்புரை 4 (ஆ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரை 3 உடன் ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84 (2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்.

எனினும் ஜனாதிபதி தனது நியமத்தராக ஆள் ஒருவரை பேரவையின் உறுப்பினராக நியமிப்பதற்கு முன்மொழியப்பட்ட உறுப்புரை 41 அ (1) ஏற்பாடு செய்யுமாயின், அத்துடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருதப்படும் ஏற்பாட்டை நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட உறுப்புரை 41 அ (6) பொருத்தமாகத் திருத்தியமைக்கப்பட்டால், மக்கள் தீர்ப்பின் அவசியம் இல்லாதொழியும்;

(iv) சட்டமூலத்தின் 19 ஆம் வாசகம் அரசியலமைப்பின் உறுப்புரை 4 (ஆ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரை 3 உடன் ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84 (2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்.

சட்டமூலத்தின் வாசகம் 30 (அ) மக்களின் நீதித்துறைத் தத்துவத்தை வரையறுப்பதற்கு நாடுவதுடன், அதனால் அது அரசியலமைப்பின் உறுப்புரைகள் 4 (இ) மற்றும் 4 (உ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரை 3 உடன் ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84 (2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்.

சட்டமூலத்தின் 39 ஆம் வாசகம் அரசியலமைப்பின் உறுப்புரை 129 (1) ஐ நீக்குவதற்கு நாடும் அளவுக்கு உள்ளதால் அரசியலமைப்பின் உறுப்புரை 4 (இ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரை 3 இற்கு ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84 (2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால்அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்.

(vii) அரசியலமைப்பின் உறுப்புரை 4 (ஆ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரைகள் 2 மற்றும் 3 ஆகியவற்றுடன் சட்டமூலத்தின் 43 ஆம் வாசகம் ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84(2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்.

(viii) சட்டமூலத்தின் 51 ஆம் வாசகம் ஏனையவற்றுடன் பிரதம அமைச்சர் தவிசாளராக இருக்கும் தேசிய பாதுகாப்புப் பேரவை என்று தலைப்பிடப்பட்ட XIX-இ அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவதற்கு நாடுகின்றது; முன்மொழியப்பட்டுள்ள உறுப்புரைகள் 156ஒ (1) மற்றும் 156ஒ (2) ஆகியவை அரசியலமைப்பின் உறுப்புரை 4 (ஆ) உடன் சேர்த்து வாசிக்கப்படும் உறுப்புரைகள் 1, 2 மற்றும் 3 ஆகியவற்றுடன் ஒவ்வாததாகவிருப்பதால், அது உறுப்புரை 84(2) ஆல் தேவைப்படுத்தப்படுகின்றவாறாக விசேட பெரும்பான்மை மூலமும் உறுப்புரை 83 இன் பயனாக மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே சட்டமாக்கப்படலாம்.

எனினும், முன்மொழியப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புப் பேரவையின் ஆக்க அமைப்பை மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள உறுப்புரைகள் 156 ஒ (1) மற்றும் 156 ஒ (2) ஆகியவை திருத்தப்பட்டு ஜனாதிபதி முன்மொழியப்பட்ட பேரவையின் தவிசாளராகநியமிக்கப்படின் அத்தகைய ஒவ்வாமை இல்லாதொழியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right