விலை, உற்பத்தி திகதிகளில் மாற்றம் செய்யப்பட்ட 10 மில்லியன் ரூபா பெறுமதியான டின் மீன்கள் மீட்பு

Published By: Vishnu

21 Jun, 2022 | 04:56 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பன்னல- முக்கலான பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் விலை மற்றும் உற்பத்தி திகதி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத 10 மில்லியன் ரூபா  பெறுமதியான  டின் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குருநாகல் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கணவாய் மீன்கள் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த   சந்தர்ப்பத்தில் டின் மீன்கள் நவீன இயந்திரங்களின் உதவியுடன் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், காலாவதியான டின் மீன்களின் கையிருப்புகளில் விலை மற்றும் உற்பத்தி திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் போது 17,000 டின் மீன்கள்  கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அதன் பெறுமதி 10 மில்லியன்  ரூபா என்றும் இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று...

2023-12-10 13:00:20
news-image

உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 12:14:23