இலங்கையில் இலவச AWS re/Start cloud திறன் பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்கும் CurveUp

Published By: Vishnu

21 Jun, 2022 | 03:59 PM
image

தொழில் வாய்ப்பற்ற மற்றும் குறைந்த வருமானமீட்டும் நபர்களுக்கு cloud திறன்களை கட்டியெழுப்பவும் தொழில்நுட்பத் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளவும் 12 வார கால பயிற்சித் திட்டம் உதவியாக அமையும்

Cloud கணனிப் பிரிவில் காணப்படும் பரந்த இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையிலும், நபர்களுக்கு cloud திறனைக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும், முன்னணி தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் கல்விச் சேவைகளை வழங்கும் நிறுவனமான CurveUp, Amazon Web Services (AWS) உடன் கைகோர்த்து, இலவசமாக cloud கணனித் திறனை கட்டியெழுப்பல் மற்றும் தொழிற் பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது. இலங்கை முழுவதிலும் AWS re/Start நிகழ்ச்சியினூடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

12 வார கால பயிற்சித் திட்டமாக AWS re/Start அமைந்திருப்பதுடன்,  AWS Cloud திறன்களின் அடிப்படை அம்சங்கள் மற்றும் நேர்காணல்கள் மற்றும் சுயவிவரக்கோவை தயாரிப்பு போன்ற பிரயோக தொழில்நிலை திறன்கள் போன்றவற்றை வழங்கி, நபர்களுக்கு ஆரம்ப நிலை cloud பதவிகளில் இணைந்து கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறையில் 150,000 க்கும் அதிகமானவர்கள் பணியாற்றுவதுடன், துறையில் பெருமளவு ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றனர். மொத்த சனத்தொகையில் 50%க்கும் அதிகமானவர்கள் மத்தியில் இணையப் பாவனை காணப்படுகின்றது. கொவிட் தொற்றுப் பரவலுக்கு பின்னரான சூழலில் இலங்கையில் ஒன்லைன் அடிப்படையிலான கல்வி பயிலல் என்பது மேலும் அதிகரித்துள்ளது. CurveUp மற்றும் AWS re/Start ஆகியன இணைந்து உள்ளடக்கமான, பரந்தளவு சர்வதேச புதிய cloud திறமைகளை கட்டியெழுப்புவதுடன், தொழில்நிலையை அணுகும் வாய்ப்பற்றவர்களை இலக்காகக் கொண்டு அவர்களை ஈடுபடுத்தி இந்த பயிற்சியை முன்னெடுக்கின்றன.

இந்தத் திட்டத்தினூடாக தகவல் தொழில்நுட்பத்துறையில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத, தொழில் வாய்ப்பின்றி காணப்படும் மற்றும் குறைந்தவருமானமீட்டும் நபர்களுக்கும், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துறையில் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் காணப்படுவோருக்கும் இந்தத் திட்டம் உதவியாக அமைந்திருக்கும். CurveUp இன் ஸ்தாபகர் மொஹமட் பவாஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் காணப்படும் பரந்தளவு திறமைகள் மற்றும் வளங்களை எடுத்துக் கொண்டால் அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன என்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை. AWS உடனான இந்த பங்காண்மை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைவதுடன், AWS re/Start திட்டத்தை முன்னெடுப்பதனூடாக, cloud இல் தமது அறிவுத்திறனை கட்டியெழுப்பிக் கொள்ள எதிர்பார்க்கும் நபர்களுக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். சகல பாகங்களையும் சேர்ந்த நபர்களை இந்தத் திட்டத்தில் இணையுமாறு அழைக்கின்றோம்.” என்றார்.

Linux, Python, networking and security, மற்றும் relational databases போன்றன அடங்கலான திறன் கட்டியெழுப்பலில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துவதுடன், தலைப்புகளின் பிரகாரமான செயன்முறைகள், ஆய்வுகூட பயிற்சிகள் மற்றும் கற்கைநெறி செயற்பாடுகள் போன்றவற்றை கொண்டிருக்கும். சான்றளிக்கப்பட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களினால் இந்தக் கற்கை ஒன்லைன் பயிலல் ஊடக கற்பிக்கப்படும். AWS re/Start என்பது பயிலுநர்களுக்கு இலவசமானதாக அமைந்திருக்கும் என்பதுடன், AWS Certified Cloud Practitioner பரீட்சைக்கான கட்டணத்தையும் உள்ளடக்கியுள்ளது. இந்த AWS சான்றளிப்பு, பயிலுநர்களின் cloud திறனை உறுதி செய்து கொள்ள உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், தொழிற்துறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிமுகப்படுத்தல்களையும் வழங்குவதாக அமைந்திருக்கும்.

ASEAN இன் Amazon Web Services Singapore Private Limited இன் AWS பயிற்சி மற்றும் சான்றளிப்பு தலைமை அதிகாரி இம்மானுவேல் பிள்ளை கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் எனும் வகையில், இலங்கையில் AWS re/Start அறிமுகம் செய்யப்பட்டுள்ளதையிட்டு நான் பெருமை கொள்கின்றேன். AWS re/Start இனால்  பணியாளர்கள் கட்டமைப்பில் “net-new” திறமைசாலிகளை உள்வாங்கி, நபர்களுக்கு cloud இல் வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கும், நிறுவனங்களுக்கு தமது போட்டிகரத்தன்மையை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், சமூகங்களுக்கும் மேம்பாட்டை எய்தக்கூடியதாக இருக்கும். AWS Cloud உடன் புத்தாக்கத்தை மேம்படுத்தி எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு செயலாற்றும் நிறுவனங்களுக்கு Cloud பணியாளர்களை தயார்ப்படுத்துவதற்காக CurveUp உடன் பணியாற்றுவதையிட்டு பெருமை கொள்கின்றோம்.” என்றார்.

அதன் பிரகாரம், AWS re/Start இனால் நபர்களுக்கு ஆரம்ப நிலை cloud role களான cloud செயற்பாடுகள், site reliability மற்றும் உட்கட்டமைப்பு ஆதரவு போன்ற வழங்கப்படும். AWS re/Start உடனான கைகோர்ப்பினூடாக, CurveUp க்கு இலங்கையில் cloud திறனை கட்டியெழுப்ப உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், தொழிற்துறைக்கு பெருமளவில் உதவியாக அமைந்திருக்கும் உறுதியான பயிலல் சூழலை ஏற்படுத்தவும் ஏதுவாக இருக்கும். CurveUp இனால் திறமையாளர்களை இனங்காண்பது மற்றும் நாட்டிலுள்ள பல மாபெரும் தொழில் வழங்குநர்களில் காணப்படும் தொழில் வாய்ப்புகளை வழங்கி அவர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்வது போன்ற செயற்பாடுகளையும் CurveUp இனால் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

உலகளாவிய ரீதியில் காணப்படும் 29 மில்லியன் பேரின் cloud கணனித் திறன்களை 2025 ஆம் ஆண்டளவில் இலவசமாக கட்டியெழுப்பிக் கொள்வதற்கு பங்களிப்பு வழங்கும் Amazon இன் முயற்சிகளின் ஒரு அங்கமாக AWS re/Start நிகழ்ச்சித் திட்டம் அமைந்துள்ளது.

கற்கைத்திட்டம் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு - https://aws.amazon.com/training/restart/ 

கற்கைத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கு - https://gocurveup.com/aws-re-start/

CurveUp பற்றி

பல்வேறு பாடசாலைகள், சர்வதேச நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் மற்றும் அரச சார்பற்ற சமூகங்கள் போன்றவற்றுடன் CurveUp இணைந்து புத்தாக்கமான, பின்பற்றக்கூடிய மற்றும் வினைத்திறனான தீர்வுகளை, அதன் DDE – Design, Deliver & Engage கொள்கையின்  அடிப்படையில் கட்டியெழுப்பும் வகையில் செயலாற்றுகின்றது. CurveUp பற்றிய மேலதிக தகவல்களை பார்வையிட - www.gocurveup.com  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right