(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் நாடு அராஜக நிலைமைக்கு தள்ளப்படும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அன்றாட வாழ்வை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்ற சிக்கல் காணப்படுகிறது.
எனவே தேர்தல் தொடர்பில் ஆழமாக சிந்தித்து கருத்துக்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்வதாக அமைச்சவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இடைக்கால அரசாங்கத்தினால் நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதால் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வினவிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய நிலைமையில் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் இரு முறைமைகளைப் பின்பற்ற முடியும். அதற்கமைய பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு யோசனையொன்றை முன்வைத்து அதனை நிறைவேற்றினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இதனைத் தெரிவித்துள்ளார். அவரால் அந்த யோசனையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனில் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்.
அல்லது அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதியினால் பாராளுமன்றதைக் கலைக்க முடியும்.
எவ்வாறிருப்பினும் பாராளுமன்றத்தைக் கலைப்பதினால் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது? வெளிநாட்டு கடன்களை எவ்வாறு மீள செலுத்துவது? பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நாடு அராஜக நிலைமைக்கு தள்ளப்பட்டால் அன்றாட வாழ்வை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்ற சிக்கல் காணப்படுகிறது.
எனவே இவை தொடர்பில் ஆழமாக சிந்தித்து கருத்துக்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM