(வத்துகாமம் நிருபர்)

மாவனெல்லை ஹெம்மாத்தகம பிரதேசத்தில் வேலை செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபர் மரமொன்றின் கிளைகளை வெட்டும் போது மின்சார கம்பியொன்று கிளை மீது பட்டதால் மின்சாரம் தாக்கியுள்ளது. 

மின்சாரம் தாக்கியதில் கடுங் காயங்களுக்குள்ளான குறித்த நபர் ஹெம்மாத்தகம வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹெம்மாத்தகம ரன்திலிகம பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.ஜீ.ரம்பண்டா (வயது  61) எனஅடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஹேம்மாத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.