(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இலங்கையும் தொடரை சமப்படுத்த அவுஸ்திரேலியாவும் முயற்சிக்கவுள்ளன.
இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்றபோதிலும் அடுத்த 2 போட்டிகளிலும் எதிர்நீச்சல் போட்டு இலங்கை அபார வெற்றிகளை ஈட்டி தொடரில் 2 - 1 ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது போட்டியில் தசுன் ஷானக்கவின் அதிரடியும் 3ஆவது போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்கவின் கன்னிச் சதம், குசல் மெண்டிஸின் அரைச் சதம் ஆகியனவும் இலங்கையின் வெற்றிகளில் பெரும் பங்காற்றியிருந்தன.
இதன் பலனாக இலங்கையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 20 வருடங்களின் பின்னர் அடுத்தடுத்த சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றது.
அத்துடன் இன்றைய போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் 20 வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் தொடர் வெற்றியை ஈட்டுவது இதுவே முதல் தடவையாக இருக்கும்.
மேலும், நடப்பு தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் பிரதான சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க டி சில்வா இல்லாமலே இலங்கை வெற்றிபெற்றது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
இரண்டாவது போட்டியில் அறிமுகமான இளம் வீரர் துனித் வெல்லாகே சகல துறைகளிலும் பிரகாசித்திருந்தார். அத்துடன் சுழல் பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே 3ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய துடப்பாட்ட வீரர்களுக்கு சிரமத்தைக் கொடுத்திருந்தார்.
இந் நிலையில் மூன்றாவது போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இன்றைய போட்டியிலும் இலங்கை அணியில் இடம்பெறவுள்ளனர்.
அந்தப் போட்டியில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது தசை இழுப்பு காரணமாக ஓய்வுபெற்ற குசல் மெண்டிஸ் இன்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, 4 ஆவது போட்டியில் வெற்றிபெற்று தொடரில் பரபரப்பை ஏற்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியுள்ள டேவிட் வோர்னர் இன்றைய போட்டியில் சாதிக்க துடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுவதுடன், ஏனைய வீரர்களும் துடுப்பாட்டத்தில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்த முயற்சிக்கவுள்ளனர்.
ஒருநாள் தொடர் முடிவடைந்த பின்னர் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரைக் கருத்தில்கொண்டு இன்றைய போட்டியிலும் பெட் கமின்ஸுக்கு ஓய்வு வழங்க்பபடவுள்ளது.
எவ்வாறாயினும் முதலாவது போட்டியில் காயத்திற்குள்ளான மிச்செல் ஸ்டார்க் இன்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள்
இலங்கை: நிரோஷன் திக்வெல்ல, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), சாமிக்க கருணாரட்ன, துனித் வெல்லாலகே, துஷ்மன்த சமீர, ஜெவ்றி வெண்டர்சே மஹீஷ் தீக்ஷன.
அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (தலைவர்), மார்னுஸ் லபுஸ்சான், அலெக்ஸ் கேரி, ட்ரவிஸ் ஹெட், க்ளென் மெக்ஸ்வெல், கெமரன் க்றீன் அல்லது மிச்செல் ஸ்வெப்சன், ஜய் றிச்சர்ட்சன், மெத்யூ குனெமான், ஜொஷ் ஹேஸ்ல்வூட் அல்லது மிச்செல் ஸ்டார்க்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM