பார்வை ஆற்­றலைத் தூண்டும் கணினி சிப் உப­க­ர­ணத்தை மூளையில் உள்­ளீடு செய்­வதன் மூலம் பார்வையை இழந்­த­வர்­க­ளுக்கு பார்வை ஆற்­றலை மீளப் பெற்றுத் தரும் புரட்­சி­கர சிகிச்­சையை அமெ­ரிக்க மருத்­துவ நிபு­ணர்கள் மேற்­கொண்­டுள்­ளனர்.   

தனிப்­பட்ட இர­க­சியம் பேணும் கார­ணங்­க­ளுக்­காக பெயர் வெளி­யி­டப்­ப­டாத 30 வயது பெண்­ணொ­ரு­வ­ருக்கு அந்தக் கணினி சிப் அந்த நிபுணர் களால் வெற்­றி­க­ர­மாக பொருத்­தப்­பட்­டுள்­ளது.  

மேற்­படி சிகிச்சை மேற்­கொள்­ளப்­ப­டு­வது உலகில் இதுவே முதல் தட­வை­யாகும். 7 வருட கால­மாக முழு­மை­யாக பார்வை ஆற்­றலை இழந்து வாழ்ந்த அந்தப் பெண், கணினி மூலம் சிப் உப­க­ர­ணத்­தி­னு­டாக மூளைக்கு சமிக்­ஞைகள் அனுப்­பப்­பட்­ட­தை­ய­டுத்து ஒளிச் சித­றல்­க­ளையும் கோடு­க­ளையும் புள்­ளி­க­ளையும் அவ­தா­னித்­துள்ளார்.  

மேற்­படி உயிர் மின்­ன­ணு­வியல் கண்­ணா­னது மூளைக்கு சமிக்­ஞை­களை நேர­டி­யாக அனுப்­பு­வதன் மூலம் செயற்­ப­டு­கி­றது.  

கணி­னி­யொன்­றி­லி­ருந்து மூளை­யுடன் தொடர்பைக் கொண்ட உணர்­கொம்பு ஒன்­றுக்கு சமிக்­ஞை­களை அனுப்பி வைத்­ததன் மூலமே அந்தப் பெண் ஒளியின் வர்ணம் மற்றும் வடி­வங்­களைப் பார்க்கும் ஆற்­றலைப் பெற்­றுள்ளார். தற்­போது அந்தப் பெண்­ணுக்கு சிறிய காணொளிப் புகைப்­படக் கரு­வியைப் பயன்­ப­டுத்தி காட்­சி­களை மூளைக்கு அனுப்பி அவ­ருக்கு எதிரில் உள்ள பொருட்­களை துல்­லி­ய­மாக பாரப்­ப­தற்கு உதவ மருத்­து­வர்கள் திட்­ட­மிட்­டுள்­ளனர்.  

இந்த சிகிச்சை முறை­மை­யா­னது அமெ­ரிக்க கலி­போர்­னிய பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மருத்­து­வர்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.  

மேற்­படி சிகிச்சை முறைமை மூலம் பார்வை இழந்த ஒரு­வ­ருக்கு துல்­லி­ய­மான முழு­மை­யான பார்வை ஆற்­றலை பெற்றுத் தரு­வது எதிர்­வரும் ஆண்டின் ஆரம்­பத்தில் சாத்­தி­ய­மாகும் என அந்த மருத்­து­வர்கள் கூறு­கின்­றனர்.   

இந்த புரட்சிகர சிகிச்சையானது உல கெங்குமுள்ள இரு கண்களையும் இழந்த மற்றும் புற்றுநோய் பாதிப்பால் கண்பார்வையை இழந்த மில்லியன் கணக்கான மக்களுக்கு பார்வை ஆற்றலை மீளப் பெற வழிவகை செய்வதாக உள்ளது.