ஜனாதிபதி கோட்டாபய நெருக்கடிகளிலிருந்து நிச்சயம் நாட்டை மீட்பார் - பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் மஹிந்த 

By T Yuwaraj

20 Jun, 2022 | 10:14 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இருப்பு எப்போதுமே வலிமையின் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த நெருக்கடியிலிருந்து அவர் நிச்சயம் நாட்டை மீட்டெடுப்பார் என்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில் , 

' ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவர் தனது வாழ்நாளில் இன்னொரு வருடத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில், அவரது இருப்பு எப்போதுமே வலிமையின் ஆதாரமாக இருந்து வருகிறது. மேலும் இந்த நெருக்கடியிலிருந்து அவர் நாட்டைப் நிச்சயம் மீட்பார் என்பதில் உறுதியாகவுள்ளேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை வலுசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவும் தனது ட்விட்டர் செய்தியில், 'ஜனாதிபதிக்கு ஆரோக்கியமான, வளமான மற்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்தை வழிநடத்த சவால்களை சமாளிக்க அதிக வலிமை, தைரியம் மற்றும் ஆசீர்வாதங்கள் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 'இந்த கடினமான காலங்களில் நாட்டை வழிநடத்தும் சுமையை சுமக்கும் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாம் முன்னேறும் போது செழிப்பு மற்றும் ஒற்றுமையின் எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் செயல்படுவோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவும் தனது டுவிட்டர் பதிவின் ஊடாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், மும்மூர்த்திகள் இந்த ஆண்டும் எப்போதும் உங்களை ஆசீர்வதித்து வழிகாட்டட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார நெருக்கடியின் போது சீனா வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right