சனத் நிஷாந்தவின் சகோதரர்  கைது - விளக்கமறியலில் வைக்க உத்தரவு

By T Yuwaraj

20 Jun, 2022 | 08:41 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

சிலாபம் – ஆராச்சிக்கட்டு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்தவின் சகோதரர் உள்ளிட்ட மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின்  பொது ஜன பெரமுன  உறுப்பினரான 38 வயதான ஜகத் சமந்த எனும்  பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் சகோதரர்,  சமீர மதுசங்க,  ஏ.ஏ. தம்மிக  ஆகியோரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று ( 20) சிலாபம் நீதிவான்  அனுர இந்ரஜித் புத்ததாஸ முன்னிலையில் அவர்கள் ஆஜர் செய்யப்பட்ட போது குறித்த மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க  நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right