logo

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண ஒத்துழைப்புகளை வழங்குவோம் - அவுஸ்திரேலிய அமைச்சர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

Published By: Vishnu

20 Jun, 2022 | 08:53 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள்ளிருந்து ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் க்ளேயார் ஒனீல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

உத்தியோக விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் இன்று 20 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

May be an image of 3 people and people standing

சட்ட விரோத குடியேற்றம் மற்றும் ஆட் கட்டத்தல் என்பவற்றுக்காக கொன்சவேடிவ் அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகளையே தொழிற்கட்சியும் பின்பற்றுவதாகவும் அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.

சட்ட விரோத குடியேற்றத்தினை தடுப்பதற்காக தான் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி, கடற்படையினர் அந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.

May be an image of 4 people and people standing

அவுஸ்திரேலிய அரசாங்கம் கப்பல், தொழிநுட்ப மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி , இரு நாடுகளும் தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்து சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் அவுஸ்திரேலியா மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து சமுத்திரத்தை பாதுகாப்பு வலயமாக பேணுவதற்கு தமது அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடற்படையினர் 50 பேர் விசேட பயிற்சிகளுக்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். இவ்வாறான பயிற்சிகளின் போது இந்நாட்டு பாதுகாப்பு படையினருடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்து ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

May be an image of 2 people

சுங்க நிர்வாகத்தில் அனுபவத்தை வழங்குவதன் மூலம் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்யவும் அவுஸ்திரேலியா உதவும் என்று அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

மீனவர்களை ஒழுங்குபடுத்துவதற்கும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதற்கும், சர்வதேச மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர இலங்கையை மையமாக மாற்றுவதற்கும் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல்...

2023-06-10 14:59:32
news-image

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்...

2023-06-10 14:33:19
news-image

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின்...

2023-06-10 14:18:30
news-image

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி...

2023-06-10 14:19:25
news-image

கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு...

2023-06-10 13:26:16
news-image

மன்னாரில் மானிய எரிபொருள் வழங்குவதில் குளறுபடி;...

2023-06-10 13:25:43
news-image

33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள்

2023-06-10 12:37:55
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது-இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் குரலை...

2023-06-10 11:12:06
news-image

சட்டவிரோதமாக பீடி இலைகளைக் கடத்த முற்பட்ட...

2023-06-10 10:34:24
news-image

நீதியரசர் நவாஸ் ஆணைக்குழு அறிக்கையில் நீதி...

2023-06-10 09:46:03