பிரதமர் ரணிலை பதவியிலிருந்து நீக்கி சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் - வாசுதேவ

By Vishnu

20 Jun, 2022 | 08:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து ஜனாதிபதி சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும், இல்லாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையினை கருத்திற் கொண்டு சகல அரசியல் கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் என  இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர்  வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தில் 20 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பதவியில் இருக்கும் வரை சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாது. பிரதமர் பதவி விலக வேண்டும், இல்லாவிடின் ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்க வேண்டும்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சகல தரப்பினரது இணக்கப்பாட்டிற்கமைய பிரதமரை நியமித்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

இதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்க வேண்டும்.சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முதலில் அரசியல் கட்சிகள் அனைத்தும் முதலில் ஒன்றினைய வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, 10 அரசியல் கட்சிகள், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகள் அனைவரும் முதலில் ஒன்றினைய வேண்டும்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதை தவிர்த்து தற்போது மாற்று வழியேதும் கிடையாது. சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தடையாக உள்ளார்.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் ஆனால் தற்போதைய நிலையில் அவரும் அவசியம் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right