பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு காண்பது, மக்களை கஸ்டங்களில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான் முக்கியமே மாறாக தேர்தல் நடாத்துவது அல்லது ஆட்சியின் அமைப்பை மாற்றுவது அல்ல என்று கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து மேலும் தெரிவிக்கையில்,
கட்சியினுடைய பொதுச்சபை கூடி பல விடயங்களை ஆராய்ந்திருந்தோம். குறிப்பாக கட்சிக்குள் இருக்க கூடிய முரண்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தோம். அத்தோடு வன்னி தேர்தல் மாவட்ட மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம்.
எரிபொருள் தொடர்பாக இந்தியா வழங்கிய கடன் முடிவடைந்துள்ளது மேலும் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,
அரசாங்கம் வெவ்வேறு பேச்சுவார்த்தை நடாத்தி இது தொடரும். நேற்று முன்தினம் இந்திய நாடாளுமன்றத்திலே வெளிவிவகார அமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் காத்திரமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு இலங்கைக்கு தொடர்ந்தும் உதவும் வேலையினை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் நாட்டின் பொருளாதார சிக்கல் காரணமாக தேர்தல் ஒன்று நடாத்தப்பட வேண்டும் என கூறி வருகின்றனர் இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என வினவிய போது,
இன்றைய சூழலில் தேர்தல் முக்கியமில்லை, குறிப்பாக பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு காண்பது, மக்களை கஸ்டங்களில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான் முக்கியமே மாறாக தேர்தல் நடாத்துவது அல்லது ஆட்சியின் அமைப்பை மாற்றுவது அல்ல என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM