இன்று உலக அகதிகள் தினம்

Published By: Digital Desk 5

20 Jun, 2022 | 04:33 PM
image

குமார் சுகுணா

இன்று உலக அகதிகள் தினம் . அகதிகள் என்ற வார்த்தை நமக்கு மிகவும் பரீட்சயமான சொல். ஏன் எனில் நம்மில் பலரும் அப்படிதான் இருக்கின்றோம். 

கடந்த காலம் நாட்டில் ஏற்பட்ட துயர்மிகு யுத்தம் சொந்த நாட்டிலேயே நம்மை அகதிகளாக்கியது. இன்றைய பொருளாதார சூழ்நிலை மீண்டும் அகதி என்ற வட்டத்துக்குள் நம்மை அடக்கிவிடுகின்றது. 

ஆம் பலர் இங்கு வாழ முடியாமல், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தினமும் அகதிகளாக இடம் பெயர்ந்து செல்வதை பார்க்கின்றோம்.

போர், பட்டினி, வறட்சி, அல்லது பல்வேறு வன்முறைகள், இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிப்பதற்காக, தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் வேறு இடத்துக்கு இடம் பெயர்கின்றவர்களே  அகதி எனப்படுவர்.

2000-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி உலக அகதிகள் தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

அதன்படி உலக அகதிகள் தினம் முதன்முதலில் ஜூன் 20, 2001 கொண்டாடப்பட்டது.. இந்நாள் ஆபிரிக்க அகதிகள் தினமாகத்தான் ( Africa Refugee Day )  முன்னர் நினைவு கூறப்பட்டது. 

பின், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ( United Nations General Assembly ) சிறப்பு தீர்மானம்படி,  ஆபிரிக்க அகதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக,  உலக அகதிகள் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. டிசம்பர் 2000-லிருந்து உலக அகதிகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்றைய நாள் உலகில் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால், அரசியல், சமூக சூழல் காரணமாக அகதிகளாக அல்லல்படும் அகதிகளை நினைவு கூறும் வகையில், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் 8 கோடி பேர் அகதிகளாக இருப்பதாகவும், ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் அகதிகளாக வேறொரு நாட்டில் தஞ்சமடைவதாகவும் ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களில், மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து வேறிடம் சென்று வாழ்வது இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. 2000இல் 17 கோடியே 30 இலட்சம் பேர் தாய் நாட்டிற்கு வெளியே வாழ்ந்தததாகவும், 2020-இல் அந்த எண்ணிக்கை 28 கோடியே 10 இலட்சமாக அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

இது உலக மக்கள் தொகையில் 3.6 சதவிகிதம் ஆகும்.

இலங்கையில் 1983-இல் உள்நாட்டுப் போர் தொடங்கியது முதல் இலங்கையில் இருந்து  தமிழர்கள் உலகம் முழுவதும் புலம்பெயரத் தொடங்கினர்.  பல நாடுகளுக்கு  அகதிகளாக சென்றவர்கள் இன்று புலம் பெயர் தமிழர்களாக  கெளரவமாக வாழவும் செய்கின்றனர். ஆனால் எல்லா நாடுகளிலும் இது சாத்தியமில்லை. யுத்த காலத்தில் சொந்த நாட்டில் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டவர்கள் இன்றம் கூட தங்களது சொந்த இடத்தில் நிம்மதியாக வசிக்க முடியாது நிலைமையே இலங்கையில் உள்ளது.

இந்நிலையில், 1983 முதல் தமிழகத்துக்கு 3 இலட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் இடம்பெயர்ந்துள்ளனர். தமிழக மற்றும் இந்திய அரசின் மூலம்  மீண்டும் சுமார் 2.12 இலட்சம் அகதிகள் இலங்கை திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 1,02,000 பேர் அகதிகள் முகாம்கள் மற்றும் பொலிஸ்நிலையங்களில் பதிவு செய்துவிட்டு வெளியிலும் தங்கியுள்ளனர்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், மார்ச் 22-ஆம் திகதி முதல் 25 குடும்பங்களைச் சேர்ந்த 90 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்று , மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில்,அந்தக் கோரிக்கையை கருணையுடன் பரிசீலிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஆனாலும், 2019 குடியுரிமைதிருத்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேசத்தில் இருந்து வந்த இந்துக்களைப்போல, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கப்படவில்லை. 2012-ஆம் ஆண்டு இறுதியில் இருந்து அகதிகளாக வருவோரை தமிழக அரசு கைது செய்து,  கடவுசீட்டு ஆவணச் சட்டம் மற்றும் சட்டவிரோதமாக வந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சிறைகளில் அடைத்து வந்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வந்த 90 இலங்கைத் தமிழர்களை மனிதாபிமான அடிப்படையில் அகதிகள் முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இவர்களுக்கு உதவித்தொகை எதுவும் வழங்கவில்லை. தற்போது அகதிகளாக வந்தவர்களை எப்படி வகைப்படுத்துவது என மத்திய அரசின் முடிவுக்காக தமிழக அரசு காத்திருக்கிறது.

மேலும், அவர்களுக்கு ஏற்கனவே தமிழக முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று புகலிடம் வழங்க சிறப்பு அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதே வேலை உலகளவில் ஒவ்வொரு நிமிடமும் அகதிகள் உருவாக்கப்பட்டு கொண்டே இருக்கின்றனர். இதற்கு இயற்கை பேரிடர்கள் என்பதனை தாண்டி மனிதனின் பேராசைகளின் விளைவான யுத்தமும் பிரதான காரணங்களில் ஒன்றாக உள்ளது. அண்மையில் ரஷ்யா உக்ரைன் யுத்தத்தினால் கூட இன்னும் மக்கள் அகதிகளாக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். 

உலகம் முழுவதுமே அகதிகளாக இன்னொரு நாட்டுக்கு இடம்பெயரும் போது பல்வேறு இன்னல்களை மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது மனிதன் தான் பிறந்த மண்ணைவிட்டு, வேறு நாட்டிற்கு தஞ்சம் புகுவது என்பது மிகவும்  .கொடுமையான வேதனைக்குள்ளானது.  இதன்போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. 

இந்த நிலைமைகள் என்றும் தீரும் என்று கூற முடியாது. உலகம் முழுவதும் உள்ள அகதிகள் அனைவருமே நிம்மதியான கெளரவமான வாழ்க்கையை பெற வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பும் விருப்பமுமாகவும் உள்ளது. ஒவ்வொரு நாடும் மனிதாபிமானத்துடன் அகதிகளை நடத்தினாலேயே  போதும் அவர்களது வாழ்க்கை பெரும் நிம்மதியை பெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04