850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து

By Rajeeban

20 Jun, 2022 | 04:41 PM
image

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக 850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

எரிபொருள் நெருக்கடிக்கு உடனடிதீர்வை முன்வைக்காவிட்டால் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுடில் ஜயரூக் தெரிவித்துள்ளார்.

போதியளவு எரிபொருள் இல்லாததால் தங்கள் தொழிலை தொடரமுடியாத நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலக்கதகடுகளை அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட தினங்களில் முச்சக்கரவண்டி சாரதிகள் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள்  எரிபொருளை பெறும் திட்டம் குறித்து அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.

எனினும் தங்கள் தொழில்துறையினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே இதனை முன்னெடுக்க முடியும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுடில் ஜயரூக் தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் ஐந்து லீற்றர் எரிபொருள் வழங்கும் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் கிராமசேவையாளர்கள் மூலம் முச்சக்கரவண்டி சாரதிகளை அடையாளம் காணமுடியும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மூலம் அவர்களிற்கு எரிபொருளை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மூன்று நாட்கள் வரிசையில் நின்று 2000 ரூபாய்க்கு எரிபொருளை பெற்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து இரண்டு மூன்று நாட்கள் வரிசையி;ல் நிற்க்கும் நிலை காரணமாக மக்கள் முச்சக்கர வண்டி செலுத்தும் தொழிலை கைவிடும் நிலையே ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right