யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஒருதொகை ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.