நாட்டு நிலைமை மோசமடைந்துள்ளது : பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேர்தலுக்குச் செல்வதில் தவறில்லை - ஹர்ஷ டி சில்வா

By Vishnu

20 Jun, 2022 | 11:04 AM
image

(எம்.மனோசித்ரா)

இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர் எனில் நாட்டு நிலைமை எந்தளவிற்கு மோசமடைந்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இடைக்கால அரசாங்கத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை எனில் , தேர்தலுக்குச் செல்வதில் தவறில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 

மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை உணர்ந்து அவர்கள் அனுபவித்து வரும் மன வேதனையை அறிந்து பாதுகாப்பு துறையினர் பொறுப்புடனும் , பொறுமையுடனும் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர் எனில் நாட்டு நிலைமை எந்தளவிற்கு மோசமடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச செலவீனங்களை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

ஆனால் செலவுகளைக் குறைப்பதென்பது மிகக் கடினமாகும். எனவே வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

வருமானத்தை அதிகரிப்பதற்கு ஏற்றுமதி பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும். சர்வதேச சந்தை மற்றும் முதலீட்டு கொள்கைகள் முற்றாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.

டொலர் வருமானம் கிடைக்கப் பெறக் கூடிய முதலீடுகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதபட்சத்தில் 2023 மார்ச்சில் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.

2020 பொதுத் தேர்தலுக்கு 5 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு 4.5 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் பாதுகாப்பு அமைச்சின் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு 12 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறான செலவுகளுடன் ஒப்பிடும் போது தேர்தலுக்கான செலவு அதிகம் என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

தற்போது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை எனில் தேர்தலுக்குச் செல்வதில் தவறில்லை. தேர்தலுக்கு செல்லும் பட்சத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஜனநாயக அரசாங்கம் அமைக்கப்படும்.

எனவே 21 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்தி சர்வதேசத்தின் மத்தியிலும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். தற்போது அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஒன்றுடனொன்று பிண்ணிப்பிணைந்துள்ளன. எனவே இவை இரண்டுக்கும் ஒரே சந்தர்ப்பத்தில் தீர்வு காண வேண்டியது அவசியமானதாகும்.

இப்போதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 20 ஆவது திருத்தத்திற்கு அமையவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். பிரதமருக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை.

அதிகாரிகளுக்கிடையே குழப்ப நிலைமை காணப்படுகிறது. இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தின் மூலம் தீர்வினைக் காண முயற்சிக்க வேண்டும். அன்றேல் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப்...

2022-12-08 16:10:34
news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07