வரிசைகளில் 13 பேர் வரை உயிரிழப்பு ; 50 நிரப்பு நிலையங்கள் தாக்குதல்

Published By: Digital Desk 3

20 Jun, 2022 | 09:07 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில் நிலவும் நெருக்கடியுடன் கூடிய நிலைமையில்,  எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த போது இதுவரை 13 பேர் வரை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த மார்ச் 19 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் இந்த 13 பேரும் வரிசைகளில் கத்திருந்த போது உயிரிழந்துள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டன.

இதனிடையே தற்போதும், நாடளவிய ரீதியில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில்,  சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்க தலைவர் குமார் ராஜபக்ஷ இது குறித்த தகவல்களை வெளிப்படுத்தினார்.

கண்டி - யட்டி நுவர கச்சேரிக்கு அருகிலுள்ள  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து

கடந்த மார்ச் 19 ஆம் திகதி மாலை உயிரிழந்துள்ளார். வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதுவே இலங்கையில் எரிபொருள் நெருக்கடி நிலைமையை அடுத்து, வரிசையில் மக்கள் எரிபொருளுக்காக காத்திருந்த போது பதிவான முதல் மரணமாகும்.

இதனைத் தொடர்ந்து கம்பஹா, கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, குருணாகல், திருகோணமலை, உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வரிசையின் போதான மரணங்கள் பதிவாகின.  

பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்னெய் பெற்றுக்கொள்ள வரிசையில் பல மனி நேரங்கள் காத்திருந்தவர்களும், சமையல் எரிவாயு பெற காத்திருந்தவர்களும் இவ்வாறு   பரிதாபகரமாக உயிரிழந்திருந்தனர்.

இது இவ்வாறு இருக்க,  தற்போது நாட்கணக்கில், எரிபொருளுக்காக மக்கள் காத்திருக்கும் நிலையில்,  எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் போது நிராசை அடைந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான அமைதியின்மைகள் காரணமாக இதுவரை 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வரை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறும்  எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ,  நிரப்பு நிலையங்களுக்கு போதுமான பாதுகாப்பு தரப்படாவிட்டால், எரிபொருளை கொள்வனவுச் செய்து விநியோகிக்கப் போவதில்லை என குறிப்பிட்டார்.

இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், திடீர் திடீர் என  அமைதியின்மை சம்பவங்கள், நிரப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் தோன்றலாம் என உளவுப் பிரிவினர் பாதுகாப்பு தரப்பினரை எச்சரித்துள்ளனர்.

இந்நிலையிலேயே  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் உயர் பொலிஸ்  அதிகாரிகளுடன் நேற்று முன்தினம்   இது தொடர்பில் விரிவாக கலந்துரையடையுள்ளதுடன்,  அமைதியின்மைகளை கட்டுப்படுத்த பலப்பிரயோகம் செய்யவும் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக...

2024-12-09 17:32:46
news-image

நுவரெலியாவில் மாவா போதைப் பொருளை விற்றவர்...

2024-12-09 17:12:46
news-image

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச...

2024-12-09 17:25:22
news-image

விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு

2024-12-09 17:17:43
news-image

பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்தும்...

2024-12-09 17:30:51
news-image

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும்...

2024-12-09 17:06:14
news-image

மசாஜ் நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கூரிய...

2024-12-09 16:36:38
news-image

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் காயம் ;...

2024-12-09 16:47:56
news-image

பலவீனமடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை...

2024-12-09 16:33:55
news-image

பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக பிரதி அமைச்சர்...

2024-12-09 16:29:59
news-image

நஷ்ட ஈடு கேட்டு மூதூரில் விவசாயிகள்...

2024-12-09 17:27:28
news-image

கண்டி - கொழும்பு வீதியில் விபத்து...

2024-12-09 16:05:50