வரிசையில் பல மணி நேரங்களை செலவிடும் மக்களின் விரக்தியை புரிந்து கொள்ளுங்கள் - ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி பாதுகாப்புதுறையினரிடம் கோரிக்கை

Published By: Vishnu

19 Jun, 2022 | 10:07 PM
image

(எம்.மனோசித்ரா)

தமது அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் பல மணி நேரங்களை செலவிடும் மக்களின் விரக்தியை பாதுகாப்பு துறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு - விசுவமடு பிரதேசத்தில் 18 ஆம் திகதி சனிக்கிழமை இரவு எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றுக்கு அருகில் இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினரால் வானை நோக்கி துப்பாக்கிப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே இந்த சம்பவத்தை மேற்கோற்காட்டி செய்துள்ள டுவிட்டர் பதிவில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில் , 'எரிபொருள் வரிசைகளில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருடன் தொடர்புடைய வன்முறையின் படங்கள் சிக்கலுக்குரியவை.

நீண்ட வரிசையில் பல மணிநேரங்களைச் செலவிடும் மக்களின் விரக்தியைப் புரிந்துகொள்ள பாதுகாப்புத் துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்பு துறையினர் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தினால் அது குறித்து விசாரணை நடத்துமாறு உரிய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41