(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவி ராஜ் படுகொலை தொடர்பிலான வழக்கினை சிங்களம் பேசும் சிறப்பு ஜூரிகள் சபை முன்னிலையில் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

 ரவி ராஜ் படுகொலை விவகாரம் தொடர்பிலான விசாரணைகள்  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இதனை அறிவித்தார். ஏற்கனவே ரவி ராஜ் விவகாரத்தை சிறப்பு ஜூரிகள் சபை முன்னிலையில் விசாரணை செய்ய  மேல் நீதிமன்றம் தீர்மானித்த நிலையில் இன்று வழக்கானது அது தொடர்பிலான விடயங்களை அறிவிப்பதற்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போதே எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இவ்வழக்கை சிறப்பு ஜூரிகள் சபை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த நீதிபதி அன்ரைய தினம் அனைத்து சாட்சியாளர்கலையும் மன்றில் ஆஜராக அழைப்பாணை விடுத்தார்.