யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் வேண்டுகோளிற்கு ஏற்ப நாளை பகல்  ஜனாதிபதியுடானான சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளது. 

இச் சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்த  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை நேற்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.