செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வில் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம்

By Vishnu

19 Jun, 2022 | 03:34 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) முதலாவது அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை நடைப்பெறவுள்ளது.

அத்துடன் 22 ஆம் திகதி புதன்கிழமை நாட்டில் தற்போது நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு  தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் 21 ஆம் திகதி முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன், 24ஆம் திகதி தவிர ஏனைய நாட்களில் மு.ப 10 மணிமுதல் மு.ப 11 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாளை மு.ப 10 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன்,மு.ப 11 மணி முதல் 11.30 மணிவரையான நேரத்தில் குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்தம்) சட்டமூலம் மற்றும் சிவில் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன விவாதமில்லாமல் நிறைவேற்றப்படவுள்ளன.

அதன் பின்னர் மு.ப 11.30 மணிமுதல் பி.ப 4.30 மணி வரை கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விவாதித்து நிறைவேற்றப்படவுள்ளது.

நாளை மறுதினம் மு.ப 11 மணி முதல் பி.ப 05.30 மணி வரை எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய நாட்டில் தற்போது நிலவும் சுகாதார பிரச்சினைகள் குறித்து சபை ஒத்திவைப்பு விவாதம் நடைப்பெறவுள்ளது.

கடந்த மார்ச்மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) முதலாவது அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை நடைப்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right