எம்மை சுற்றியுள்ள மனிதர்களை அடையாளப்படுத்தும் 'மாமனிதன்'

Published By: Vishnu

19 Jun, 2022 | 10:54 AM
image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் மாமனிதன் ஜூன் 24ஆம் திகதியன்று வெளியாகிறது. இந்த திரைப்படம் 'எம்மை சுற்றியுள்ள மனிதர்களில் மாமனிதன் யார்? என்பதை அடையாளப்படுத்தும்' என இப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்திருக்கிறார்.

'காத்துவாக்குல இரண்டு காதல்', 'விக்ரம்' என வரிசையாக இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களில் முதன்மையான பங்களிப்பை அளித்திருக்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மாமனிதன்'. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் தயாரான இந்த திரைப்படம் கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு ஜூன் 24ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், '' இசைஞானி இளையராஜா- இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் விஜயசேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். 20 ஆண்டுகால வாழ்வியலை சொல்லும் இந்த திரைப்படத்தில் எம்முடன் வாழ்ந்து வரும் மனிதர்களில் மாமனிதன் யார்? என்பதை அடையாளப்படுத்தும் திரை கதையாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு தான் பாடல்கள் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் நாயகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்று இருந்தது. இதற்காக பல நடிகைகள் தயக்கம் காட்டிய போது, நடிகை காயத்ரி இந்த சவாலான வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். இந்தப் படம் வெளியான பிறகு நிச்சயம் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. இசைஞானி இளையராஜா பிறந்த மண்ணில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். அத்துடன் இந்த திரைப்படத்தை திருமதி ஜீவா இளையராஜாவிற்கு சமர்பித்திருக்கிறேன். இந்த திரைப்படத்தின் மூலமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உலகமே திரும்பி பார்க்கும். தமிழகம், கேரளா, உத்திரபிரதேசம் என பல மாநிலங்களில் பயணிக்கும் கதையில், முதன்மை கதாபாத்திரத்திற்கு உயிர்ப்புடன் தன்னுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. வாழ்வியல் சார்ந்த இந்த படைப்பை கண்டு ரசிக்கும் ரசிகர்கள் அனைவரும் தங்களது விமர்சனத்தை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்தாலும், 'தர்மதுரை' வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் -மக்கள் செல்வன் விஜய் சேதுபதி -இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோரின் கூட்டணி மீண்டும் இதில் இணைந்திருப்பதால் 'மாமனிதன்' மாபெரும் வெற்றி பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் சூரி வெளியிட்ட 'டெலிவரி பாய்'...

2025-01-16 17:05:13
news-image

பார்த்திபன் வெளியிட்ட ' புரவியாட்டம் '...

2025-01-16 17:04:38
news-image

நடிகர் மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின்...

2025-01-16 17:03:46
news-image

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த விஜய் சேதுபதி...

2025-01-16 16:49:05
news-image

நடிகர் 'கெத்து' தினேஷ் நடிக்கும் 'கருப்பு...

2025-01-16 17:41:35
news-image

காதலர் தினத்தன்று வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின்...

2025-01-16 16:45:44
news-image

கத்திக்குத்து தாக்குதல் ; நடிகர் சயிப்...

2025-01-16 16:49:31
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'காதி' படத்தின்...

2025-01-16 15:16:23
news-image

நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்...

2025-01-16 11:06:42
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் பாத்திமா' படத்தின்...

2025-01-15 18:23:14
news-image

கவனம் ஈர்க்கும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'...

2025-01-15 18:18:10
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2'

2025-01-15 18:13:55