குடும்பத்தகராறு : தந்தையும், மகனும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி 

By T Yuwaraj

19 Jun, 2022 | 10:11 AM
image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையும், மகனும் தாக்குதலுக்குள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கடனாக வழங்கிய பணத்தை திருப்பிக் கேட்க சென்றவர் மீது சரமாரி தாக்குதல் |  Virakesari.lk

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று சனிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குடும்பத்தகராறு காரணமாக தந்தையையும், மகனையும் குழு ஒன்ற இரும்புக் கம்பியால் மறைந்திருந்து தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right