(நா.தனுஜா)
வெகுவிரையில் ஏற்படக்கூடிய உணவுப்பாதுகாப்புப் பிரச்சினை உள்ளடங்கலாக ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான முறையான செயற்திட்டமோ அல்லது அதற்கான இயலுமையோ தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை.
மரவள்ளி, மிளகாய் போன்றவற்றை அரிசிக்கு மாற்றீடாகப் பயன்படுத்தமுடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவுத்தட்டுப்பாட்டினால் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (17) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.
எனவே அக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்னவென்றும், பொருளாதார நெருக்கடியைச் சீரமைப்பதற்கான அரசாங்கத்தின் இயலுமை குறித்து தமது நிலைப்பாடு என்னவென்றும் விளக்கமளித்தபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
உணவுப்பாதுகாப்பு உள்ளடங்கலாக நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி என்னவென்பதை அரசாங்கம் உரியவாறு அடையாளம் கண்டிருக்கின்றதா என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது.
ஏனெனில் அரசாங்கத்திடம் பொதுவான செயற்திட்டங்கள் இருக்கின்றதே தவிர, முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்வதற்கான பிரத்யேக செயற்திட்டங்கள் எவையும் இல்லை.
அரிசித்தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் மரவள்ளி, மிளகாய் போன்றவற்றைப் பயிரிடுமாறு அரசாங்கம் கூறுகின்றது. அரிசிக்குப் பதிலாக மிளகாயை உணவாக உட்கொள்ளமுடியுமா என்பது குறித்து சிந்திக்கவேண்டும்.
அதுமாத்திரமன்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் உருவாக்கப்பட்டுள்ள உணவுப்பாதுகாப்பு தொடர்பான குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிமல் லான்சா போன்றவர்கள் இவ்விடயத்தில் நிபுணர்களோ அல்லது போதிய தெளிவுடையவர்களோ இல்லை.
எனவே புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின்மீது எம்மால் எவ்வகையிலும் நம்பிக்கைவைக்கமுடியாது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான இயலுமை இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்று நாம் கருதவில்லை.
ஆகவே அடுத்த வாரத்திலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பதவி விலகவேண்டும் என்றும் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தும் பிரசாரத்தைப் பல்வேறு வழிமுறைகளிலும் முன்னெடுக்கவுள்ளோம்.
அதேவேளை தற்போதைய சூழ்நிலையில் முழு நாட்டையும் முடக்குவதென்பது நெருக்கடிகளுக்குத் தீர்வாக அமையாது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், நாடு முடக்கப்படும் பட்சத்தில் மேலும் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதை மனதிலிருத்திச்செயற்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM