எரிபொருள் கையிருப்பு தொடர்பான இணையத்தளம் தற்காலிகமாக முடக்கம்

By T. Saranya

18 Jun, 2022 | 03:32 PM
image

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (fuel.gov.lk)  தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட அறிவிப்பு இன்று (18) காலை முதல் இணையதளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு  மற்றும் விநியோகிப்பதற்கு கிடைக்கும் எரிபொருளின் அளவு  அறிந்து கொள்ள இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

"சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிடைத்த அறிவுறுத்தல்களின் காரணமாக இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நாங்கள் விரைவில் திரும்பி வருவோம்“ என இணையதளம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறிப்பிட்ட நாளில் எரிபொருள் விநியோகம் செய்யாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right