வாதுவ ரயில் நிலையத்துக்கு முன்னால் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் “குடு ரொஷானின்” நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாதுவ ரயில் நிலையத்துக்கு முன்னால்  இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில்  59 வயதானவர்  நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

உயிரழந்தவர் களனிதிஸ்ஸ மின் நிலையத்தில் தொழில் புரிபவர் எனவும், இவர் வேலை முடிந்து வீடு திருமபும் போது கொலைசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.