இலங்கை மின்சார உணவு எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வருடம் நாட்டின் பொருளாதாரம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தை மோசமாக கையாண்டதன் காரணமாக இலங்கையின் வரலாற்றில் இல்லாதாவாறு அந்நியசெலாவணி முற்றாக முடிவடைந்துள்ளதால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 2024ம் ஆண்டு அளவிலேயே இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலையை நோக்கி முன்னேறும் என உலகவங்கி தெரிவித்துள்ளது.
2023இல் இலங்கையின் பொருளாதாரம் 3.7வீதத்தினால் வீழ்ச்சியடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு கடன்கொடுப்பனவு நிறுத்தப்பட்டமை உட்பட பல காரணங்களால் இலங்கையின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளன இலங்கையின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகளவு நிச்சயமற்றவையாகவும்,குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஆபத்தை கொண்டனவையாகவும் காணப்படுகின்றன எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளையும் அதிகரித்துவரும் அரசியல் நிச்சயமற்ற தன்மையையும் எதிர்கொண்டுள்ளது,மின்துண்டிப்பு தொடர்கின்றது உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் நுண் பொருளாதார ஸ்திரதன்மையை மீட்டமைத்தல் ஆகிய நடவடிக்கைகளை அதிகாரிகள் தாமதப்படுத்தினால் பொருளாதார வீழ்ச்சி மேலும் மோசமடையலாம் எனவும் உலக வங்கி எச்சரித்துள்ளது.
கடன்மறுசீரமைப்பு என்பது நி;திபுனர்வாழ்வு நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு மிகவும் அவசியமானது எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
நாளாந்தம் உணவுப்பொருட்களின்விலைகள் மிகவும் உயர்வது குறித்தும் அதன் காரணமாக வறியவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM