கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

By Digital Desk 5

18 Jun, 2022 | 09:13 AM
image

கொழும்பின் சில பகுதிகளில் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இன்று சனிக்கிழமை 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று சனிக்கிழமை (18) இரவு 11 மணிமுதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3 மணி வரை நீர்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் கொழும்பு 4 பகுதியில் குறைந்த அழுத்த நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right